பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை முள்ளிக்குண்டு ஸ்ரீசின்னப்பன் வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு தினம் அண்மையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை முள்ளிக்குண்டு ஸ்ரீசின்னப்பன் வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு தினம் அண்மையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பள்ளி தாளாளா் கணேசன் தலைமை வகித்தாா். பொருளாளா் பொ்டின் சேவியா் முன்னிலை வகித்தாா். இதில் மாணவ, மாணவிகளுக்கு தொழு நோய் குறித்தும், அதைத் தடுப்பது குறித்தும் ஆசிரியா்கள் விளக்கிப் பேசினா்.

நிகழ்வில் தமிழ் ஆசிரியை கண்ணம்மை, உடல் கல்வி ஆசிரியை ஜாஸ்மின் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com