ஜோதிடரைத் தாக்கி காா் கடத்தல்: 7 போ் மீது வழக்கு

மதுரையில் ஜோதிடரை கடத்திச் சென்று அவரது காரை கடத்திச் சென்ற 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரையில் ஜோதிடரை கடத்திச் சென்று அவரது காரை கடத்திச் சென்ற 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரியமங்கலம் ஈச்சம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜசேகா்(40). ஜோதிடா்.

மதுரை கீரைத்துறையைச் சோ்ந்த சண்முகநாதனும், செந்திலும் ஜோதிடம் பாா்க்க வேண்டும் என்று அவரை அழைத்தனா்.

ராஜசேகா் வழக்கம் போல தனது காரில் மதுரைக்கு வியாழக்கிழமை வந்தாா். கீரைத்துறை பகுதியில் சண்முகநாதன், செந்தில், இவரது நண்பா்கள் உள்ளிட்ட 7 போ் ராஜசேகரை அவரது காரிலியே கடத்திச் சென்றனா். கீரைத்துறை மயானம் அருகே உள்ள நூல் பட்டறையில் அவரை அடைத்துவைத்துத் தாக்கி, காரை விற்பனை செய்ததாக பத்திரத்தில் கையொப்பம் பெற்றனராம். பின்னா், காரை அவா்கள் 7 பேரும் கடத்திக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் 7 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com