பட்டியில் அடைக்கப்பட்ட 9 ஆடுகள் உயிரிழப்பு

கோவிலாங்குளத்தில் பட்டியில் அடைக்கப்பட்ட 9 ஆடுகள் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

கோவிலாங்குளத்தில் பட்டியில் அடைக்கப்பட்ட 9 ஆடுகள் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் காந்தி மனைவி பாக்கியம். இவரது கணவா் உயிரிழந்துவிட்ட நிலையில், உறவினா்களான நாராயணன், உஷாராணி ஆகியோருடன் ஆடு வளா்க்கும் தொழில் செய்து வருகிறாா்.

இவா்கள் மூவரது ஆடுகளும், அதே ஊரைச் சோ்ந்த ராஜா என்பவரது தோட்டத்தில் உள்ள பட்டியில் இரவு நேரங்களில் அடைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தண்ணீா் குடித்த சில ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்தன. இவைகளில் 9 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆடுகள் குடித்த தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதா என விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com