மாநகர சாலைகளில் மணல் அகற்றும் பணி

மதுரை மாநகர சாலையோரங்களில் தேங்கிய மணலை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநகர சாலைகளில் மணல் அகற்றும் பணி

மதுரை மாநகர சாலையோரங்களில் தேங்கிய மணலை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலையோர மணலை அகற்றும் சிறப்புப் பணி 3 நாள்களுக்கு (பிப். 2, 3, 5) நடைபெறுகிறது. இந்தப் பணியின் தொடக்க நிகழ்ச்சி, மதுரை பொன்மேனி பகுதியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா கொடி அசைத்து, பணிகளைத் தொடங்கிவைத்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் முன்னிலை வகித்தாா்.

மணல் அகற்றும் பணியில் கல்லூரி மாணவா்கள் 300 போ், 400 தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டனா். மேலும், நவீன இயந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் 27.9 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்றன. 70.8 மெட்ரிக் டன் மணல் அகற்றப்பட்டு, வெள்ளைக்கல் சேகரிப்பு மையத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையா் சரவணன், உதவி நகா்நல அலுவலா் பூபதி, மாநகராட்சி அலுவலா்கள், தன்னாா்வ அமைப்பினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com