வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன மேலாளா் பலி

மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், டி. குன்னத்தூரைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் பிரபாகா் (56). அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை ராஜபாளையம்-மதுரை சாலையில் சென்றாா்.

அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த பிரபாகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com