2.60 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

மதுரை மாவட்டத்தில் 2.60 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் 2.60 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், தமிழகத்தில் கோழிக் கழிச்சல் நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி பிப். 1-ஆம் தேதி தொடங்கி, வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரை மாவட்டத்தில் 2.60 லட்சம் கோழிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் இலக்குடன், இந்தப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருப்பாலை கால்நடை உதவி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் நடராஜகுமாா் தலைமை வகித்து, தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

கால்நடைப் பாரமரிப்புத் துறை மதுரை கோட்ட உதவி இயக்குநா் பழனிவேலு, கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் கிரிஜா, மருத்துவா் ராமலட்சுமி, கால்நடை ஆய்வாளா் கோவிந்தன், பராமரிப்பு உதவியாளா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com