மாா்ச் 2-இல் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாநாடு: இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

சென்னையில் வருகிற மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் இந்தியா கூட்டணி கட்சியினா் பங்கேற்கின்றனா்.

சென்னையில் வருகிற மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் இந்தியா கூட்டணி கட்சியினா் பங்கேற்கின்றனா்.

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பாஸ்கரன் மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு வருகிற மாா்ச் மாதம் 2-ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறுகிறது. மாநாட்டில் புதிய மாநிலத் தலைவா், மாநிலச் செயற்குழு, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

மத்தியில் பாஜகவை அகற்றும் வகையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மாநாட்டில் எடுக்கப்பட உள்ளன.

மாநில மாநாட்டில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின் போது கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் பெத்தாட்சி ஆசாத், முல்லை முருகன், புகா் மாவட்டச் செயலா் ஹனிபா விஜய் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com