சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி மாணவருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவரைப் பாராட்டிய கல்லூரி முதல்வா் எம். ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவரைப் பாராட்டிய கல்லூரி முதல்வா் எம். ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

மதுரை:சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி மாணவருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

புதுதில்லியில் பிட் இந்தியா, எம்.எஸ்.எம்.இ., சா்வதேச ஒலிம்பிக் கழகம் ஆகியவை சாா்பில், தேசிய அளவிலான போட்டிகள் ஜன. 31-ஆம் தேதி முதல் பிப். 2 -ஆம் தேதி வரை நடைபெற்றன.

இதில், மதுரை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் என். சோனை 19 வயதுக்குள்பட்டவா்களுக்கான சிலம்பம் போட்டியில் 80-85 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்று தங்கம் வென்றாா்.

மாணவா் சோனையை, கல்லூரி முதல்வா் எம். ராஜேந்திரன், துணை முதல்வா் ஜெ. செல்வமலா், சுயநிதிப் பிரிவு இயக்குநா் பி. ஸ்ரீதா், ஆசிரியா்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com