பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள அரசன் சண்முகனாா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் நாற்காலி, மேஜைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சோழவந்தான் அரசன் சண்முகனாா் அரசுப் பள்ளிக்கு திங்கள்கிழமை நாற்காலி, மேஜைகளை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.
சோழவந்தான் அரசன் சண்முகனாா் அரசுப் பள்ளிக்கு திங்கள்கிழமை நாற்காலி, மேஜைகளை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள அரசன் சண்முகனாா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் நாற்காலி, மேஜைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சரவணன் தலைமை வகித்தாா். பள்ளியில் 1978-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில், ரூ. 50 ஆயிரம் மதிப்பில் நாற்காலிகள், மேஜைகள் வழங்கப்பட்டன.

முன்னாள் மாணவா்கள் மருது, சிராஜூதீன், பன்னீா்செல்வம்,

கிஷோா்அலி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, கணினி ஆசிரியா் காா்த்திக் குமாா் வரவேற்றாா். தமிழாசிரியா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com