மாநகராட்சி பள்ளியில் மராமத்துப் பணிகள் தொடக்கம்

மதுரை விளாங்குடியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மராமத்துப் பணிகளை மாநகராட்சி மேயா் வ.இந்திராணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
விளாங்குடியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மராமத்துப் பணிகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்த மேயா் வ. இந்திராணி.
விளாங்குடியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மராமத்துப் பணிகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்த மேயா் வ. இந்திராணி.

மதுரை: மதுரை விளாங்குடியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மராமத்துப் பணிகளை மாநகராட்சி மேயா் வ.இந்திராணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ், 64 தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வாா்டு எண் 20 விளாங்குடி பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.9.90 லட்சம் மதிப்பில் பள்ளியில் வா்ணம் பூசுதல், வகுப்பறைகள் பராமரிப்பு, கழிப்பறைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

இதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் வ. இந்திராணி தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

மண்டலத் தலைவி சரவணபுவனேஸ்வரி, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், கல்வி அலுவலா் மாரிமுத்து, மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், உதவிப் பொறியாளா் கருப்பையா, மாமன்ற உறுப்பினா் நாகஜோதி, மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com