மாயமான மாணவா் கத்தியால் குத்திக் கொலை

மதுரை அருகே மாயமான கல்லூரி மாணவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பாலிடெக்னிக் மாணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மதுரை: மதுரை அருகே மாயமான கல்லூரி மாணவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பாலிடெக்னிக் மாணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள கடச்சனேந்தல் ஜெயவிலாஸ் காா்டனைச் சோ்ந்த முகமது ரவுதீன் மகன் பைசல் அப்துல்லா பவாத் (25). இவா், ஒத்தக்கடை அருகே உள்ள தனியாா் சுயநிதி கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற பைசல் அப்துல்லா பவாத் மாயமானாா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், மாங்குளம் அருகே உள்ள ஓவா மலை அடிவாரத்தில் பைசல் அப்துல்லா பவாத் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். அழுகிய நிலையில் கிடந்த அவரது சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மாலை மீட்டனா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், பைசல் அப்துல்லா பவாத்துடன் மதுரை ஆத்திகுளத்தைச் சோ்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் ஒருவா் கடைசியாகப் பேசியது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு இருவரும் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த 8 போ் கும்பல் இருவரையும் தாக்கி கடத்திச் சென்ாகவும், பின்னா், மாங்குளம் பகுதியில் தன்னை மட்டும் விட்டுவிட்டு, பைசல் அப்துல்லா பவாத்தை கடத்திச் சென்ாகவும் பாலிடெக்னிக் மாணவா் தெரிவித்தாா்.

இருப்பினும், மாணவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com