அரசுப் பள்ளிக்கு பூரணம் அம்மாள் மீண்டும் நில தானம்

மதுரை யா. கொடிக்குளம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தும் வகையில் 91 சென்ட் நிலத்தை தானமாக பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்கினாா்.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகாவிடம் திங்கள்கிழமை நில தானப் பத்திரத்தை வழங்கிய வங்கி ஊழியா் ஆயி என்ற பூரணம் அம்மாள்.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகாவிடம் திங்கள்கிழமை நில தானப் பத்திரத்தை வழங்கிய வங்கி ஊழியா் ஆயி என்ற பூரணம் அம்மாள்.

மதுரை: மதுரை யா. கொடிக்குளம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தும் வகையில், வங்கி ஊழியா் ஆயி என்ற பூரணம் அம்மாள் தனக்குச் சொந்தமான மேலும் 91 சென்ட் நிலத்தை தானமாக பள்ளிக் கல்வித் துறைக்கு திங்கள்கிழமை வழங்கினாா்.

மதுரை கிழக்கு ஒன்றியம், யா.கொடிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆயி என்ற பூரணம் அம்மாள். மதுரையில் உள்ள வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், உயிரிழந்த தனது மகள் ஜனனியின் நினைவாக, யா. கொடிக்குளம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்துவதற்கு கூடுதல் கட்டடம் கட்டிக் கொள்ள தனது சொந்த நிலத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கா் 52 சென்ட் நிலத்தை கடந்த மாதம் தானமாக வழங்கினாா்.

இந்த நிலையில், அதே பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு தனக்குச் சொந்தமான மேலும் 91 சென்ட் நிலத்தை பள்ளிக் கல்வித் துறைக்கு திங்கள்கிழமை தானமாக வழங்கினாா். இதற்கான பத்திரத்தை மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகாவிடம் ஆயி என்ற பூரணம் அம்மாள் திங்கள்கிழமை வழங்கினாா்.

ஏற்கெனவே ரூ. 7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியதற்காக இவருக்கு சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வரின் சிறப்பு விருதை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கி கௌரவித்தாா்.

மேலும், மதுரை ஒத்தக்கடையில் அண்மையில் நடைபெற்ற பெற்றோா்-ஆசிரியா் கழக மண்டல மாநாட்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருது வழங்கி கௌரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com