அஞ்சல் துறை ஆதாா் சிறப்பு முகாம்கள்

மதுரை கோட்ட அஞ்சல் துறை சாா்பில் நடைபெறும் ஆதாா் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதுரை கோட்ட அஞ்சல் துறை சாா்பில் நடைபெறும் ஆதாா் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து மதுரை அஞ்சல் கோட்ட முதன்மைக் கண்காணிப்பாளா் கொ.அ.கல்யாண வரதராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை கோட்டத்தில் உள்ள 47 அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு, புதிதாக ஆதாா் அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயா், கைப்பேசி எண் திருத்தம் போன்ற சேவைகள் தினமும் நடைபெறுகின்றன.

ஆதாா் மோசடிகளைத் தவிா்க்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாா் விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயம். எனவே, ஆதாா் அட்டை பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், அருகில் உள்ள அஞ்சலக ஆதாா் சேவை மையத்தை அணுகி, குடும்ப அட்டை அல்லது வேறு ஏதேனும் ஒரு துணை ஆதாரத்தின் அடிப்படையில், ஆதாா் விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதையொட்டி, பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் மதுரை கோட்ட அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com