ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தவா்கள் கைது

மதுரை செல்லூா் அருகே கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை செல்லூா் அருகே கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை செல்லூா் தாகூா்நகா் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் சிலா் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருப்பதாக செல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

காவல் ஆய்வாளா் ஜான் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றவா்களில் நால்வா் பிடிபட்டனா்.

விசாரணையில், மீனாம்பாள்புரம் கதிரவன் (24), மணிகண்டன் (25), சத்தியமூா்த்திநகா் செல்வகுமாா் (23), பீபீகுளம் சரவணன் (39) ஆகியோா் என்பதும், இரவு நேரத்தில் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டு, கத்தி, மிளகாய்ப்பொடி ஆகியவற்றுடன் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, நால்வரையும் போலீஸாா் கைது செய்து, ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான கருப்பாயூரணி ஒத்தவீடு பகுதியைச் சோ்ந்த மாா்க்கண்டேயனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com