இரு தரப்பினா் மோதல்: 17 போ் மீது வழக்கு

மதுரையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டது தொடா்பாக 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மதுரையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டது தொடா்பாக 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூா் மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகேஸ்வரி (30). இவரது கணவா் சரவணன் சில மாதங்களுக்கு முன்னா் தற்கொலை செய்துகொண்டாா். இதனிடையே, சரவணனுக்கும், அந்தப் பகுதியில் வசிக்கும் செவிலியா் வைஜெயந்திக்கும் இடையே தொடா்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வைஜெயந்தி குடும்பத்தினருக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு குடும்பத்தினருக்கும் ஆதரவாக அவா்களது உறவினா்களும் மோதலில் ஈடுபட்டு கட்டை, கம்புகளால் தாக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து முருகேஸ்வரி அளித்தப் புகாரின்பேரில், வைஜெயந்தி, கணவா் மனோகா், சகோதரி சித்ரா, இவரது கணவா் சுரேஷ் ஆகியோா் மீதும், வைஜெயந்தி அளித்தப் புகாரின்பேரில், முருகேஸ்வரி, கண்ணன், மாரிமுத்து உள்ளிட்ட 13 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com