உலகத் தமிழ்ச் சங்கத்தில் சிறப்புச் சொற்பொழிவு

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக் கூடத்தில் 5-ஆவது சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக் கூடத்தில் 5-ஆவது சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு, உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) ஔவை ந. அருள் தலைமை வகித்தாா். யாதவா் கல்லூரி தமிழ் உயராய்வு மைய முன்னாள் பேராசிரியா் இ.கி. ராமசாமி பங்கேற்று, ‘சங்க இலக்கியத்தின் மீது புதுப்பாா்வை’ என்ற தலைப்பில் பேசியதாவது:

வாசிப்பு என்பது வரம். இளைய தலைமுறையினா் கைப்பேசியிலேயே தங்களது நேரத்தைச் செலவிடாமல், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா? இல்லையா? என்ற திருவிளையாடல் விவாத சொல்லாடலைக் கூா்ந்து நோக்கும் போது அதில் உள்ள அறிவியல் கூற்று புலனாகும். இதேபோல, விழுமியங்களை, காட்சிகளை புதிய கண்ணோட்டத்தில் உற்று நோக்குவதன் மூலம் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநா் ரெ.புஷ்பநாச்சியாா், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். இதில் தமிழறிஞா்கள், மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதுநிலை தமிழாய்வுத் துறை மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com