செங்கோட்டை- ஈரோடு ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் ரயில் பாதைப் பராமரிப்புப் பணிகளையொட்டி செங்கோட்டை- ஈரோடு ரயில் போக்குவரத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 9) ஒரு நாள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் ரயில் பாதைப் பராமரிப்புப் பணிகளையொட்டி செங்கோட்டை- ஈரோடு ரயில் போக்குவரத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 9) ஒரு நாள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதைப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, வெள்ளிக்கிழமை (பிப். 9) மட்டும் செங்கோட்டை - ஈரோடு ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் செங்கோட்டை- ஈரோடு (16846) முன்பதிவில்லாத ரயில், கரூா்- ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மறு மாா்க்கத்தில், ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட வேண்டிய ஈரோடு- செங்கோட்டை (16845) ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com