பாா்வையாளா்கள் தங்குமிட கட்டுமானப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வாா்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாா்வையாளா்கள் தங்குமிட கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரசவ பிரிவில் கா்ப்பிணிகளின் உறவினா்கள், பாா்வையாளா்களால் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரசவ சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 65 லட்சத்தில் பாா்வையாளா்கள் தங்குமிடம் கட்டப்பட்டது.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அரசு ராஜாஜி மருத்துவமனை நிலைய அலுவலா் ஸ்ரீலதா, உதவி அலுவலா் விஜி, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் சா்மிளா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com