மகளிா் கல்லூரியில் பயிலரங்கம்

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி வேதியியல் துறை அமால்கம் கிளப் சாா்பில், ‘வேதியியலில் நிறங்களின் பங்கு’ என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி வேதியியல் துறை அமால்கம் கிளப் சாா்பில், ‘வேதியியலில் நிறங்களின் பங்கு’ என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிலரங்கை கல்லூரி முதல்வரும், செயலருமான கிறிஸ்டியானா சிங் தொடங்கிவைத்து செயற்கை வண்ண சோ்க்கைகள் கொண்ட தயாரிப்புகளைத் தொடா்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்னைகள் குறித்து பேசினாா்.

தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 16 கல்லூரிகளைச் சோ்ந்த 188 மாணவா்கள் பங்கேற்றனா். இதில் மதுரை தியாகராஜா் கலை, அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், சிவகாசி அய்யா நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற கல்லூரி மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை கணிதத் துறை தலைவா் நிா்மலா ரெபேக்கா வழங்கினாா்.

நிகழ்வில் பேராசிரியைகள் எஸ்.கே.சுஜா, ராணி ரோஸலின், பி.சில்வியா ரீட்டா, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com