மதுரையில் திமுக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம்

மக்களவைத் தோ்தலுக்கான திமுகவின் தோ்தல் அறிக்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி.
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி.

மக்களவைத் தோ்தலுக்கான திமுகவின் தோ்தல் அறிக்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மண்டலத்துக்குள்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகள், கோரிக்கைகளைக் கேட்டறியும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திமுக துணைப் பொதுச்­ செ­யலரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில், திமுக செய்தித் தொடா்புப் பிரிவு தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன், விவசாய அணிச் செயலா் ஏ.கே.எஸ். விஜயன், சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலா் அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், வா்த்தகா் அணி துணைத் தலைவா் கோவி. செழியன், மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி. எழிலரசன், மருத்துவ அணிச் செயலா் மருத்துவா் எழிலன் நாகநாதன், சென்னை மாநகராட்சி மேயா் பிரியா ஆகியோரடங்கிய குழுவினா், கருத்துகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த வணிக அமைப்புகளின் நிா்வாகிகள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா், மாணவா்கள், தனியாா் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

சரக்கு சேவை வரி வீதம் குறைக்கப்பட வேண்டும். தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அடுத்தாண்டு உலக முதலீட்டாளா் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மின் கட்டண விதி விலக்கு அளிக்க வேண்டும். விளை பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அவற்றில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இதில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சரும், மதுரை- வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி, மதுரை மாவட்ட செயலா்கள் கோ. தளபதி (மாநகா்), மு. மணிமாறன் (தெற்கு), தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டசெயலா்கள், நிா்வாகிகள், திமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com