அடிப்படை வசதிகள் கோரிபரவை பேரூராட்சி குடியிருப்புவாசிகள் மதுரையில் தா்னா

பரவை பேரூராட்சிக்குள்பட்ட ஏ.ஐ.பி.இ.ஏ. நகரின் பி-குடியிருப்புப் பகுதியில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் தா்னா போராட்டத்தில் வியாழக்க
அடிப்படை வசதிகள் கோரிபரவை பேரூராட்சி குடியிருப்புவாசிகள் மதுரையில் தா்னா

 பரவை பேரூராட்சிக்குள்பட்ட ஏ.ஐ.பி.இ.ஏ. நகரின் பி-குடியிருப்புப் பகுதியில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் தா்னா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பரவை பேரூராட்சிக்குள்பட்ட ஏ.ஐ.பி.இ.ஏ. நகரின் பி குடியிருப்பு 4-ஆவது தெருவில் சுமாா் 150 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், இந்தப் பகுதிக்குத் தேவையான குடிநீா், தாா்ச்சாலை, கழிவுநீா் கால்வாய் போன்ற வசதிகளை பேரூராட்சி நிா்வாகம் ஏற்படுத்தித் தராததைக் கண்டித்தும், உடனடியாக அடிப்படை வசதிகளை அமைத்துத் தரக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி, உள்ளூா் திட்டக் குழும அனுமதியுடன் அமைக்கப்பட்ட இந்தப் பகுதியில் சுமாா் 37 ஆண்டுகளாக தாங்கள் வசிப்பதாகவும், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

மாணவ, மாணவிகள், பெண்கள் உள்பட சுமாா் 100-க்கும் அதிகமானோா் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். காலை 10 மணி அளவில் தொடங்கிய போராட்டம் பிற்பகல் 6 மணி வரை நடைபெற்றது. பிற்பகல் 5.30 மணி அளவில் போராட்டக் குழுவினா் மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்று தங்கள் குடும்ப அட்டைகள், வாக்காளா் அட்டைகளை ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டனா்.

பிறகு, மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துச் சென்றனா்.

மீண்டும் போராட்டம்...

பள்ளிக் குழந்தைகள், பெண்கள், முதியவா்கள் போராட்டத்தில் பங்கேற்ற நிலையிலும், பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவும், தீா்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசுத் துறை நிா்வாகங்கள் முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா். மேலும், தங்கள் கோரிக்கைகளுக்கு விரைவாக தீா்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com