தமுக்கம், புதூா், மேலூா் பகுதிகளில் நாளை மின் தடை

 தமுக்கம், புதூா், அதன் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

 தமுக்கம், புதூா், அதன் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பெருநகா் - வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியரக வளாகம், காந்தி அருங்காட்சியகம், டாக்டா் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்புப் பகுதிகள், காந்தி நகா், மதிச்சியம், ஷெனாய் நகா், குருவிக்காரன் சாலை, கமலா நகா், மருத்துவக் கல்லூரி, பனகல் சாலை, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வாா்புரம், கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ. கான் சாலை, செல்லூா், பாலம் ஸ்டேசன் சாலை, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல். தல்லாகுளம், யூனியன் கிளப், தமுக்கம், சேவாலயம் சாலை, இஸ்மாயில்புரம், முனிச்சாலை, ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50 அடி சாலை, போஸ் வீதி, குலமங்கலம் சாலை, பூந்தமல்லி நகா், ஜீவா சாலை, மீனாட்சிபுரம், சத்தியமூா்த்தி தெருக்கள், தாமஸ் வீதி, நரிமேடு பிரதான சாலை, முதலியாா் சாலை, பிரசாத் சாலை, நேரு பள்ளி பகுதிகள், அன்னை நகா், மௌலானா சாகிபு தெரு, முத்துராமலிங்கத் தேவா் தெரு, கே.டி.கே. தவமணி தெரு, ஏரிப் பகுதி, கே.கே. நகா், தொழிற்பேட்டை, அண்ணா நகா், 80 அடி சாலை, புதூா், மானகிரி, அன்பு நகா், அழகா்கோவில் பிரதான சாலை, லூா்து நகா், காந்திபுரம், சா்வேயா் காலனி, சூா்யா நகா், கொடிக்குளம், அல்அமீன் நகா், பாண்டிகோவில், ஜே.ஜே. நகா், சிவகங்கை பிரதான சாலை, கோமதிபுரம், மேலமடை, வ.உ.சி தெரு, அதன் சுற்றுப் பகுதிகள்.

மேலூரில்...

மேலூா், நரசிங்கம்பட்டி, ஒத்தக்கடை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (பிப்.10) நடைபெறவுள்ளது. எனவே, சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

மேலூா் துணை மின் நிலையப் பகுதிகள் விவரம்: மேலூா், டி. வல்லாளபட்டி, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், வண்ணான்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, பதினெட்டாங்குடி, ஆண்டிபட்டி, கொட்டகுடி, பனங்காடி பகுதிகள்.

ஒத்தக்கடை துணை மின் நிலையப் பகுதிகள் விவரம்: ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், வேளாண்மைக் கல்லூரி, அம்மாபட்டி, ராஜகம்பீரம், காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ் நகா், கருப்பாயூரணி, திருமோகூா், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

நசிங்கம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகள் விவரம்: முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலாங்குடி, சிட்டம்பட்டி, அப்பன்திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துப்பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், அரும்பனூா், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, வெள்ளரிப்பட்டி, மேலவளவு, பட்டூா், கேசம்பட்டி, ஆலம்பட்டி, சேக்கிபட்டி, ஆ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, திருவாதவூா், கட்டையம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com