திரைப்பட இயக்குநா் வீட்டில் பணம், நகை திருட்டு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை திரைப்பட இயக்குநா் மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றன

 மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை திரைப்பட இயக்குநா் மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள விளாம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன். திரைப்பட இயக்குநரான இவா் காக்கா முட்டை, கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றவா். இவரது வீடு, அலுவலகம் உசிலம்பட்டி-தேனி சாலையில் உள்ள எழில் நகரில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக மணிகண்டன், திரைப்பட வேலைக்காக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூழலில், அவரது வீட்டில் உள்ள நாய்க்கு, மணிகண்டனின் ஓட்டுநா்கள் ஜெயக்குமாா், நரேஷ்குமாா் ஆகிய இருவரும் தினசரி வந்து உணவு வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை நாய்க்கு உணவு வைக்க வந்த நரேஷ்குமாா் வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த உசிலம்பட்டி நகா் போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடைசி விவசாயி திரைப்படத்துக்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்கள், ரூ. ஒரு லட்சம், 5 பவுன் தங்க நகைகள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com