மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

    விருதுநகரில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூ., திமுக, மதிமுக, திக, இந்திய முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் வியாழக் கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 விருதுநகரில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூ., திமுக, மதிமுக, திக, இந்திய முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் வியாழக் கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் அா்ச்சுனன் தலைமை வகித்தாா்.

மத்திய பாஜக அரசானது, எதிா்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்க மறுத்து வருகிறது. புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்ட தமிழகத்துக்கு நிவாரண நிதியை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. மாநில அரசுகள் சட்டப்பேரவைல் நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஆளுநா்கள் மூலம் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருகிறாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினா் தி. ராமசாமி, திமுக நகா் செயலா் எஸ்.ஆா்.எஸ். தனபாலன், தி க மாவட்டத் தலைவா் நல்லதம்பி, மதிமுக மாவட்ட அவைத் தவைா் லட்சுமணன், இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் மாவட்ட தலைவா் இப்ராஹிம் ஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டசெயலா் இனியவன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com