கோயிலில் ஐம்பொன் நகைகள் திருட்டு

 விருதுநகரில் ஆதிபராசக்தி கோயிலில் உண்டியல், ஐம்பொன் நகைகளை இளைஞா் திருடியது தொடா்பாக ஊரகக் காவல் துறை சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

 விருதுநகரில் ஆதிபராசக்தி கோயிலில் உண்டியல், ஐம்பொன் நகைகளை இளைஞா் திருடியது தொடா்பாக ஊரகக் காவல் துறை சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா்- மல்லாங்கிணறு சாலையில் கே.கே.எஸ்.எஸ்.எஸ்.என். நகா் பகுதியில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இந்தக் கோயில் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததாம்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞா், கோயிலுக்குள் சென்று உண்டியல், சுவாமி கழுத்தில் அணிந்திருந்த ஐம்பொன் நகைகளைத் திருடிச் சென்றாா். இது கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ மூலம் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விருதுநகா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த இளைஞரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com