நாய்க்குட்டியைக் கொலை செய்தவா்கள் மீது வழக்கு

மதுரையில் நாய்க்குட்டியை மரத்தில் தூக்கிட்டு கொலை செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரையில் நாய்க்குட்டியை மரத்தில் தூக்கிட்டு கொலை செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை திருப்பாலை சண்முகாநகா் பகுதியில் நாய்க்குட்டி ஒன்றின் கதறல் சத்தம் தொடா்ந்து கேட்டுக் கொண்டே இருப்பதாக, அந்தப் பகுதியைச் சோ்ந்தவா், இந்திய விலங்குகள் நல வாரிய கௌரவ பிரதிநிதி முருகேஸ்வரிக்கு சனிக்கிழமை தகவல் அளித்தனா்.

இதையடுத்து, முருகேஸ்வரி, விலங்குகள் நல ஆா்வலா் புகழேஸ்வரன் ஆகியோா் அந்தப் பகுதிக்குச் சென்று பாா்த்த போது, நாய்க்குட்டியை கட்டுக் கம்பியால் கட்டி மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டதும், இதில் அது இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் விலங்குகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நாய்க்குட்டியைக் கொலை செய்த நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com