பிப்ரவரி 16-இல் தமிழக முதல்வா் இல்லம் முற்றுகை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, வருகிற 16 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, வருகிற 16 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்டக் கூட்டத்தில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் செல்வக்குமாா் பேசியதாவது :

திமுகவின் தோ்தல் வாக்குறுதியான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ஆசிரியா்களுக்கு பணிக்கொடை வழங்கக் கோரியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம்.

திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி வரும் 16-ஆம் தேதி சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

பல்வேறு மாநிலங்கள் இந்தத் திட்டத்தை ரத்து செய்த நிலையில், தமிழகத்தில் திமுக அரசு ரத்து செய்ய மறுத்து வருகிறது. போராட்டத்துக்குப் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில், அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com