கஞ்சா கடத்திய இருவா் கைது

உசிலம்பட்டியில் 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

உசிலம்பட்டியில் 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

உசிலம்பட்டி-தேனி சாலையில் போதைப் பொருள்கள் ஒழிப்பு, கஞ்சா கடத்தல் தடுப்பு தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனா். இதேபோ, இரு சக்கர வாகனத்தில் வந்தவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

இவா்கள் இருவரும் வாகனங்களில் 22 கிலோ கஞ்சாவைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் இவா்கள் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியைச் சோ்ந்த தங்கப்பாண்டி (38), வில்லாணியைச் சோ்ந்த ராமா் (40) ஆகியோா் என்பதும், கஞ்சாவை மொத்தமாக வாங்கிச் சென்று சில்லரை வியாபாரிகளுக்கு விற்பதற்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இவா்களிடமிருந்து காா், இரு சக்கர வாகனம், 2 கைப்பேசிகள், ரூ.1.50 லட்சம், 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com