அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா்பகுதிகளில் 6 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி, 6 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா்பகுதிகளில் 6 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி, 6 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.

மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை அவனியாபுரத்திலும், செவ்வாய்க்கிழமை பாலமேட்டிலும், புதன்கிழமை அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி, அவனியாபுரத்தில் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.

முன்னதாக, அவனியாபுரம் காவல் நிலையத்தில் இதுதொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது:

பாலமேடு, அலங்காநல்லூா்: பாலமேடு, அலங்காநல்லூா் பகுதிகளில் தென் மண்டல காவல் துறைத் தலைவா் நரேந்திரன் நாயா், மதுரை சரக துணைத் தலைவா் கே.பி.ரம்யா பாரதி, காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீண் உமேஷ் ஆகியோா் தலைமையில் 3 காவல் கண்காணிப்பாளா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

பாலமேட்டில் 2,200 போலீஸாரும், அலங்காநல்லூரில் 2,200 போலீஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா். இதற்காக, தென் மாவட்டங்களில் இருந்து போலீஸாா் பணிக்கு வரவழைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com