அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (ஜன. 17) தொடங்கிவைக்கிறாா்.


மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (ஜன. 17) தொடங்கிவைக்கிறாா்.

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 6,099 காளைகளும், 1,784 மாடுபிடி வீரா்களும் பதிவு செய்துள்ளனா்.

தென் மண்டல காவல் துறைத் தலைவா் டி.எஸ்.நரேந்திரன் நாயா் தலைமையில், மதுரை சரக துணைத் தலைவா் ரம்யா பாரதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் டோங்ரே பிரவீண் உமேஷ், ரா.சிவபிரசாத், 50-க்கும் மேற்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com