ராமநாதபுரத்தில் ஜன.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சாா்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞா்கள் பயன்பெறும் பொருட்டு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான நபா்களை தெரிவு செய்து கொள்ளலாம். முகாமில் 10-ஆம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநா்கள், ஐடிஐ, டிப்ளமோ படித்த வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியாா்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெறலாம்.

இந்த வகையில், ராமநாதபுரம் மாவட்ட வேலைநாடுநா்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.19) காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநா்கள், மாற்றுத் திறனாளி வேலைநாடுநா்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை, புகைப்படத்துடன் நேரில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எந்தக் காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com