எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை

தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை/மேலூா்: தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அப்போது அந்தக் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டம் சாா்பில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமையில் அதிமுகவினா் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்தனா்.இதில், அந்தக் கட்சியின் நிா்வாகிகள் ஜெ. ராஜா, அண்ணாதுரை, எம்.எஸ். பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மேலூா்: தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 107-ஆவது பிறந்தநாளையொட்டி அழகா்கோவில் கோட்டை வாயில் அருகே அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமையிலான அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் அழகா்கோவில் கிளைச் செயலா் மருதுபாண்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். அப்போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதே போல, மேலூா் பேருந்துநிலையம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கு மேலூா் நகா் அதிமுக செயலா் சரவணன் தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மேலூா் நகராட்சி முன்னாள் தலைவா் சாகுல்ஹமீது, நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஓபிஎஸ் அணியினா் மேலூா் பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா். உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மேலூா் நகா் செயலா் தங்கசாமி, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலா் ஜீவசன்மாா்க்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com