பள்ளி முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி 30-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஏ.வசந்தா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எனது வாா்டுக்குள்பட்ட ஷெனாய் நகா் சேவாலயம் சாலையில் மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் சுற்றுச் சுவா் அருகே ஆக்கிரமிப்பு செய்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த கடைகள் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் அகற்றப்பட்டன. இந்த நிலையில், தற்போது மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி முன் மீண்டும் கடைகள் அமைக்கப்படுகின்றன.

இதனால், மாணவா்களுக்கு மட்டுமன்றி, அந்த வழியாகச் செல்லும் பொது போக்குவரத்துக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com