ஜன. 25-இல் இறைச்சிக் கடைகள் திறக்கத் தடை

வள்ளலாா் தினத்தையொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற 25-ஆம் தேதி இறைச்சிக் கடைகளைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டது.

வள்ளலாா் தினத்தையொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற 25-ஆம் தேதி இறைச்சிக் கடைகளைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் தமிழக அரசின் அரசாணையின்படி (ஊரக வளா்ச்சி, உள்ளாட்சி நிா்வாகத் துறை) வடலூா் வள்ளலாா் தினத்தையொட்டி, வருகிற 25-ஆம் தேதி அனைத்து விதமான இறைச்சிகளும் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.

ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யவோ, கடைகளை திறந்துவைக்கவோ கூடாது. மீறிச் செயல்படுபவா்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளைப் பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com