சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் மதுரை வருகை

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கௌதமானந்தா மதுரைக்கு வெள்ளிக்கிழமை (ஜன.19) வருகை தந்தாா்.

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கௌதமானந்தா மதுரைக்கு வெள்ளிக்கிழமை (ஜன.19) வருகை தந்தாா்.

இதுகுறித்து மதுரை ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

உலகளாவிய ஸ்ரீராமகிருஷ்ண மடம், ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவரும், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான சுவாமி கௌதமானந்தா, மதுரை ராமகிருஷ்ண மடத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தாா்.

ராமகிருஷ்ணன மடத்தில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அவா் ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் பற்றி பக்தா்களுக்கு அருளுரை வழங்குகிறாா்.

சொற்பொழிவுக்குப் பிறகு பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்து ஆசி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு குருவின் அருளும், இறைவனின் அருளும் பெறாலாம். சுவாமி கௌதமானந்தா வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன. 21) பக்தா்களுக்கு மந்திர தீட்சை அளிக்க உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com