நின்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ;இளைஞா் பலி

மதுரை அருகே நின்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

மதுரை அருகே நின்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சோ்ந்த சேதுராமன் மகன் ஏகநாத்(27). இவரும், இவரது நண்பருமான காமராஜா் சாலை அழகா் நகரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் ஹரிஹரன்(27) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளனா். கல்லம்பல் மேம்பாலம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஏகநாத் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ஏகநாத், ஹரிஹரன் ஆகிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி ஏகநாத் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஹரிஹரன் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com