அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 1995-ஆம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 1995-ஆம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் மாணவா்கள் பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். முதுகலை துறைத் தலைவா் ராஜேந்திர பாண்டியன், இளங்கலைத் தலைவா் பால் ஜெயகா், பேராசிரியா்கள் பிரமிளா பால், ரவி, தாமஸ் வா்கீஸ், இளங்கோ, முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com