பைக்குகள் நேருக்கு நோ் மோதி விபத்து: விவசாயி பலி

மதுரை அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

மதுரை அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், தோடனேரி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராமகிருஷ்ணன்(64). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை வயலுக்குச் சென்றுள்ளாா். சமயநல்லூா் சாலையில் தனியாா் நிறுவனம் அருகே சென்ற போது எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com