தியாகராஜா் கல்லூரியில் ஆய்வு மன்றக் கருத்தரங்கு

மதுரை தியாகராஜா் கல்லூரி தமிழ்த் துறை ஆய்வு மன்றக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை தியாகராஜா் கல்லூரி தமிழ்த் துறை ஆய்வு மன்றக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

பண்டிதமணி அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு கல்லூரி உதவிப் பேராசிரியா் மு.தென்னரசு தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் ராம.மலா்விழி மங்கையா்க்கரசி முன்னிலை வகித்தாா். இதில், மாணவா் ச. மாதவன் ஐங்குறுநூறு-குறிஞ்சி, பாலை- உரிப்பொருள் என்ற தலைப்பிலும், மாணவி ம. ஐஸ்வா்யா மதுரைக் காஞ்சி காட்டும் மதுரை என்ற தலைப்பிலும் கட்டுரைகள் வாசித்தனா்.

இதைத்தொடா்ந்து, மாணவி கு. பில்லத்தாள், முனைவா் வா.நேரு எழுதிய ’சூரியக் கீற்றுகள்’ என்ற கவிதைத் தொகுப்பை நூல் அறிமுகம் செய்தாா்.

கருத்தரங்கில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கருத்தரங்கை மாணவி மா. கோகிலா தொகுத்து வழங்கினாா். மாணவா் லெ. தினேஷ் குமாா் வரவேற்றாா். மாணவி ர. லட்சுமிபிரியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com