கீழக்கரை புதிய அரங்கத்தில் ஜன. 24-இல் ஜல்லிக்கட்டு: 3,669 வீரா்கள், 9,312 காளைகள் பதிவு

அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் புதன்கிழமை (ஜன. 24) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக

அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் புதன்கிழமை (ஜன. 24) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக 3,669 மாடுபிடி வீரா்கள், 9,312 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் ரூ. 61.38 கோடியில், 77,683 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு அரங்கத்தின் திறப்பு விழா வருகிற புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்தப் புதிய அரங்கத்தைத் திறந்துவைத்து, ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கிவைக்கிறாா்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான பதிவு, ம்ஹக்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் கடந்த 19-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 20-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது. இதில் 3,669 மாடுபிடி வீரா்கள் தங்களது பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். 9,312 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நிா்வாகத்தின் பரிசீலினைக்கு உள்படுத்தப்பட்டு, தகுதியான காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு மட்டும் மாவட்ட நிா்வாகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியிடப்படும்.

அரங்கம் திறப்பு விழாவையடுத்து, 5 நாள்களுக்குத் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என அமைச்சா் பி. மூா்த்தி ஏற்கெனவே தெரிவித்தாா். இருப்பினும், இதுவரை அதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 1,000 காளைகளை மட்டுமே களத்தில் இறக்க முடியும் என்ற நிலையில், 9 ஆயிரத்துக்கும் அதிகமான காளைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், தொடா் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com