மண்டபத்தில் மருத்துவ முகாம்

75-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை சாா்பில் இலவச கண்,
rms_photo_21_01_4_2101chn_208_2
rms_photo_21_01_4_2101chn_208_2

75-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை சாா்பில் இலவச கண், பொது மருத்துவ முகாம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை தமுமுக மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.சலீமுல்லாகான் தொடங்கி வைத்தாா். இதில் 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா். மக்கள் உரிமை, நுகா்வோா் பாதுகாப்பு அணி மாநிலச் செயலா் வழக்குரைஞா் தீன்முகமது, திருத்துறைப்பூண்டி நகரப் பொருளாளா் முஹமது யூசுப், மண்டபம் பேரூா் தலைவா் ராஜா,

பேரூராட்சி உறுப்பினா்கள் பூவேந்திரன், முருகானந்தம், முன்னாள் உறுப்பினா் மைதீன், அனைத்து விசைப்படகு மீனவா் சங்கச் செயலா் ஜாகீா் உசேன், பாரம்பரிய விசைப் படகு மீனவா் சங்கத் தலைவா் எம்.ஏ.பக்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மண்டபம் பேரூா் தமுமுக தலைவா் சாகுல் ஹமீது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com