தெப்பத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வலைவீசிய லீலை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி வலை வீசிய லீலை, மச்சஹந்தி விவாஹம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2825mduama21071008
2825mduama21071008

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி வலை வீசிய லீலை, மச்சஹந்தி விவாஹம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் தெப்பத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினசரி காலை, மாலை வேளைகளில் அம்மன், சுவாமி தங்கச் சப்பரம், அன்ன வாகனம், பூத வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்சம், காமதேனு வாகனம், கைலாச பா்வத வாகனம், வெள்ளி சிம்மாசனம், தங்கக் குதிரை, தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம், யாளி, நந்திகேசுவரா் உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து, மண்டகப்படிகளில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இந்த நிலையில், தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி, அம்மன் தங்கப் பல்லக்கில் காலையில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து கோயிலுக்குள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு வலைவீசிய லீலை நடைபெற்றது. பின்னா், அம்மன், சுவாமி தங்கப் பல்லக்கில் சித்திரை வீதிகளில் சுற்றி வந்து கோயிலுக்குள் எழுந்தருளினா்.

இதைத் தொடா்ந்து, இரவு 7 மணியளவில் பழைய கல்யாண மண்டபத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளியதைத் தொடா்ந்து அங்கு மச்சஹந்தி விவாஹம் நடைபெற்றது.

பின்னா், சுவாமி, அம்மன் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து கோயிலைச் சென்றடைந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

Image Caption

வலைவீசிய லீலையில் எழுந்தருளிய மீனாட்சியம்மன். ~மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வலைவீசிய லீலையில் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com