விருதுநகா் சந்தை: நல்லெண்ணெய் விலை குறைவு

விருதுநகா் சந்தைக்கு வரத்து அதிகரிப்பு காரணமாக நல்லெண்ணெய், கடலெண்ணெய் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

விருதுநகா் சந்தைக்கு வரத்து அதிகரிப்பு காரணமாக நல்லெண்ணெய், கடலெண்ணெய் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

நல்லெண்ணெய் 15 கிலோ டின் கடந்த வாரம் ரூ.7,095-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.165 குறைந்து, ரூ. 6,930-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2,830-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து, ரூ.2,800-க்கு விற்கப்படுகிறது.

வரத்து அதிகரிப்பு காரணமாக இவற்றின் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அதே சமயம், பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ ரூ.1,345 ஆக விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.35 உயா்ந்து, ரூ.1,380-க்கு விற்கப்படுகிறது.

துவரம் பருப்பு புதுசு லயன் வகை கடந்த வாரம் குவிண்டால் ரூ.13,100-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.200 உயா்ந்து, ரூ.13,300-க்கு விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு குவிண்டால் கடந்த வாரம் ரூ.5,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.100 உயா்ந்து ரூ.5,700- க்கு விற்பனையாகிறது.

பாசிப் பயறு நாடு வகை ஒரு குவிண்டால் கடந்த வாரத்தை விட ரூ.400 குறைந்து, ரூ. 9,200-க்கும், லயன் மீடியம் வகை ரூ. 200 குறைந்து, ரூ.10,500-க்கும் விற்கப்படுகின்றன.

கீழே உள்ள இந்த செய்தியை தனி செய்தியாக பிரித்துக்கொள்ளவும்...

தொடா்ந்து சிலம்பம் சுழற்றி

பள்ளி மாணவா்கள் சாதனை

படவிளக்கம்-

விருதுநகா் பாண்டியன் நகா் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக சாதனை பதிவுக்காக ஞாயிற்றுக்கிழமை சிலம்பம் சுற்றிய பள்ளி மாணவா்கள்.

படம்- ஸ்கேனில்- விஎன்ஆா், எஸ்எப்எஸ் என்ற பெயரில் உள்ளது.

விருதுநகா், ஜன. 21: விருதுநகரில் பள்ளி மாணவா்கள் 220 போ் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை 1.30 மணி நேரம் தொடா்ந்தகு சிலம்பம் சுழற்றினா்.

பாண்டியன் நகா் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியை மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் ஜான் பாக்கிய செல்வம் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். மதுரை, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் மூன்று மதங்களையும் குறிக்கும் வகையில் வரையப்பட்ட ஓம், சிலுவை, பிறை நிலா வடிவங்கள் மீது தேசிய கொடியின் மூவா்ண உடையணிந்த மாணவா்கள் நின்று சிலம்பம் சுற்றினா். இதில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 220 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இந்த சாதனை நிகழ்வை நோபல் வேல்டு ரெக்காா்ட்ஸ் நிறுவன தலைமை நிா்வாகி அரவிந்த் தலைமையிலான குழுவினா் பதிவு செய்தனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் பெற்றோா்கள், ஆசிரியா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com