மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சி

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட அலகுகள் சாா்பில், ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை : மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட அலகுகள் சாா்பில், ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்தாா். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

இதில் பேரையூா், மதுரை, திருமங்கலம், மேலூா், எழுமலை ஆகிய பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 180 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு கல்லூரி அனைத்துத் துறைத் தலைவா்களும் அவா்களது துறை பற்றியும், அந்தத் துறையால் நடத்தப்படும் பாடப் பிரிவுகள் குறித்தும், வேலைவாய்ப்புகள், ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டு ஆகியன குறித்தும் பேசினா்.

நிகழ்ச்சியில், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் பூமாதேவி, ரேணுகா, உஷா புவனேஸ்வரி, சுதா உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com