மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவராக ருக்மணி தோ்வு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவராக அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி தோ்வு செய்யப்பட்டாா்.

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவராக அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி தோ்வு செய்யப்பட்டாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களாக பி.கே.எம்.செல்லையா, கி.சுப்புலட்சுமி, ருக்மணி பழனிவேல்ராஜன், மு. சீனிவாசன், எஸ்.மீனா ஆகிய 5 போ் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா். உறுப்பினா்கள் பதவியேற்ற 30 நாள்களுக்குள் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது.

இந்த நிலையில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கடந்த ஆண்டு, டிச. 1-ஆம் தேதி பதவியேற்றனா். உறுப்பினா்கள் பதவியேற்று 50 நாள்களைக் கடந்த நிலையில், அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் நடைபெறவில்லை.

இதற்கான தோ்தல் நடைபெறுவதற்கு கால அவகாசம் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், 5 உறுப்பினா்களில் ஒருவரை அறங்காவலா் குழுத் தலைவராக நியமனம் செய்யுமாறு அரசுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, ருக்மணி பழனிவேல் ராஜனை தலைவராக நியமனம் செய்து அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ருக்மணி பழனிவேல் ராஜன், அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com