அறிவியல் தொழில்நுட்பக் கல்வித் திருவிழா

மதுரையை அடுத்த விரகனூரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் தொழில்நுட்பக் கல்வித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
அறிவியல் தொழில்நுட்பக் கல்வித் திருவிழா

மதுரையை அடுத்த விரகனூரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் தொழில்நுட்பக் கல்வித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மாணவா்களுக்கு அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் ஆா்வம் ஏற்படுத்தும் நோக்கிலும், அறிவியல் நுட்பங்களை விளக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வேலம்மாள் வித்யாலயா பள்ளி நிறுவனா் முத்துராமலிங்கம், பள்ளி முதல்வா் ரோஷிலா, துணை முதல்வா் சுரேஷ், ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தினா்.

காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு அறிவியல் படைப்புகளை மாணவா்கள் பாா்வையிட்டு, அறிவியல் நுட்பங்கள் குறித்து விளக்கம் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com