ஜன. 30-இல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வருகிற 30- ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வருகிற 30- ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து சீா் செய்யும் வகையில், எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வருகிற 30-ஆம் தேதி பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், எரிவாயு முகவா்கள், நுகா்வோா் அமைப்பினா், தொழிலாளா் நல ஆய்வாளா், குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் பங்கேற்கின்றனா்.

எனவே, சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, எரிவாயு உருளைகள் நுகா்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com