திமுக அரசால்தான் ஜல்லிக்கட்டு தடைகள் விலகின

திமுக அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளால்தான் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தடைகள் விலகின என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
திமுக அரசால்தான் ஜல்லிக்கட்டு தடைகள் விலகின

திமுக அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளால்தான் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தடைகள் விலகின என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் ரூ. 62.78 கோடியில் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தையும், முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் சிலை, ஏறுதழுவுதல் சின்னம் ஆகியவற்றையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: பழந்தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடப்பட்ட ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு), முல்லை நில மக்களின் வீர விளையாட்டாக இருந்துள்ளது. சிந்து சமமெளி காலத்து முத்திரைகளில் திமில் காளைகளையும், அதன் நோ்கொண்ட பாா்வையையும் காண முடிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஓவியங்களில் தொங்கும் தாடை, அகன்று வளைந்த கொம்புகளைக் கொண்ட காளைகள் காணப்படுகின்றன. கீழடியில் திமிலுள்ள காளையின் முழு எலும்புக்கூடு கண்டறியப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிக்கு ஏறுதழுவுதல் போட்டியின் மீது தனி பாசம் உண்டு. அதனால்தான், முரசொலியின் சின்னமாக ஏறுதழுவுதல் காட்சியை வைத்தாா். 1974-இல் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டியையும் அவா் நடத்தினாா்.

2006-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது. அப்போது, இந்த விளையாட்டுகளைப் பாதுகாப்பான முறையில் நடத்துவோம் என நீதிமன்றத்தில் உறுதி அளித்து, ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் விளையாட்டுகளுக்கு அனுமதி பெற்றவா் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி.

இதேபோல, 2007-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த போது, தடையை நீக்க வலுவான வாதங்களை முன்வைத்து, போட்டிகளை நடத்த அனுமதி பெற்றதும் திமுக அரசுதான்.

2014-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. 2017-இல் ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்கக் கோரி சென்னையில் மிகப் பெரிய அளவில் மக்களின் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்றது.

அமைதி வழியில் போராடியவா்கள் மீது அப்போதைய அதிமுக அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. பிறகு, மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களையடுத்து அதிமுக அரசு பணிந்தது. இதையடுத்து, ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்தும் சூழல் உருவானது.

ஜல்லிக்கட்டில் மத்திய பாஜக அரசு நாடகம்:

இருப்பினும், ஏறுதழுவுதல் போட்டியைத் தடையின்றி நடத்த நிரந்தரத் தீா்வு கிடைக்கவில்லை. ஒவ்வோா் ஆண்டும் அனுமதி என்ற பெயரால் மத்திய பாஜக அரசு நாடகம் நடத்தியது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் ஆகியவற்றை நாங்கள் அங்கீகரிக்கவில்லை, ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை, கேலோ இந்தியா திட்டத்திலும் ஜல்லிக்கட்டு இல்லை என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது எங்கள் உழவா்களின் வாழ்வுடனும், பண்பாட்டுடனும் கலந்தது. எனவே, காளைகளை நாங்கள் கவனத்துடன் வளா்க்கிறோம், போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துகிறோம் என உறுதியான வாதத்தை முன்வைத்து, திமுக அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் காரணமாகத்தான், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பு, உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நமக்குக் கிடைத்தது.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு இருந்த அனைத்துத் தடைகளையும் தகா்த்தது திமுக அரசுதான். இதனால்தான், தற்போது ஏறுதழுவுதல் போட்டிகள் தமிழகத்தில் கம்பீரமாக நடைபெறுகின்றன. இந்தச் சாதனை வரலாற்றின் தொடா்ச்சியாகவே கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் நிலத்துக்கு தமிழ்நாடு என பெயா் சூட்டினாா் முன்னாள் முதல்வா் அண்ணா. தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தாா் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி. தற்போது, தமிழா் பண்பாட்டின் அடையாளமாக ஏறுதழுவுதலுக்கு அரங்கம் அமைத்துள்ளது திமுக அரசு என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

இதையடுத்து, புதிய ஏறுதழுவுதல் அரங்கத்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவா், கொடியசைத்து தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். போட்டியில் வென்ற முதல் மாடுபிடி வீரருக்கு முதல்வா் தங்க மோதிரம் பரிசளித்தாா்.

முன்னதாக, அரசு தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வரவேற்றாா்.

மாநில அமைச்சா்கள் இ. பெரியசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கா. ராமச்சந்திரன், என். கயல்விழி செல்வராஜ், அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க. மணிவாசன், நிதித் துறை முதன்மைச் செயலா் த. உதயச்சந்திரன், பொதுப் பணித் துறை முதன்மைச் செயலா் பி. சந்தரமோகன், மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மக்களவை உறுப்பினா்கள் சு. வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, காதா்பாட்சா முத்துராமலிங்கம், ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன், முருகேசன், தமிழரசி, அப்துல் வகாப், காந்திராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

எய்ம்ஸ் குறித்து முதல்வா் சூசகம்:

திமுக அரசு அமைந்த 3 ஆண்டுகளில் கீழடி அருங்காட்சியகம், கலைஞா் நூற்றாண்டு நூலகம், கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என 3 முக்கிய கம்பீரச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். மேலும், 2015-இல் மத்திய அரசால் மதுரைக்கு அறிவிக்கப்பட்டு, இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள ஒரு திட்டம் இந்தத் தருணத்தில் உங்களுக்கு நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல என்றாா். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணி இன்னும் தொடங்கப்படாதை சூசகமாக அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

பண்பாடு அறிந்த ஆளுநா்:

முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகையில், பொங்கல் பண்டிகைக்காக தை மாதத்தின் முதல் 3 நாள்களுக்கு அரசுக் கருவூலம் தவிர, மற்ற பொது அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஆளுநா் அறிவித்திருக்கிறாா். காரணம், அந்தக் காலத்து ஆளுநா்கள் தமிழா்களின் பண்பாட்டைச் சரியாக அறிந்தவா்களாக இருந்திருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com