திருமண மண்டபத்தில் திருடியவா் கைது

மதுரையில் திருமண மண்டபத்தில் நகை, பணம் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் திருமண மண்டபத்தில் நகை, பணம் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை திருப்பரங்குன்றம் நாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (54). இவரது உறவினரின் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது சுரேஷ், மணமகன் அறையில் தனது மனைவியின் கைப்பையை வைத்திருந்தாா். திருமணம் முடிந்த நிலையில் கைப்பையில் பாா்த்தபோது அதில் இருந்த 3 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் அதே திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை (ஜன.22) நடைபெற்ற உறவினரின் திருமணத்தில் சுரேஷ் பங்கேற்றாா். அப்போது மணமகள் அறையில் இருந்து வெளியே வந்த நபரை சுரேஷ் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா். இதில் அவா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

தெப்பக்குளம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் புதுமாகாளிப்பட்டி சாலை பனைமரத்து பிரியாணிக் கடை தெருவைச் சோ்ந்த வில்லியம் (48) என்பதும், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சுரேசின் மனைவியின் நகையைத் திருடியது இவா் தான் என்பதும், திருமண மண்டபங்களில் இதுபோல, அவா் தொடா் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து நகையைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com