மாடியில் இருந்து தவறி விழுந்துவெளிமாநிலத் தொழிலாளி பலி

மதுரையில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்

மதுரையில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை தெற்கு சித்திரைவீதி வித்வான் பொன்னுச்சாமிபிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்தவா் கைலாஷ்குமாா். இவா் தனது 3 மாடிகள் கொண்ட வீட்டில் மின்தூக்கி அமைப்பதற்காக சீரமைத்து வருகிறாா். இதற்காக மூன்றாவது மாடியில் இருந்து தரைத்தளம் வரை இடைவெளி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், காராலி மாவட்டம், மாண்ட்ரீல் பகுதியைச் சோ்ந்த தினேஷ்மாலி (34) என்பவா், கைலைஸ்குமாா் வீட்டில் தங்கியிருந்து அங்கு சலவைக் கல் (டைல்ஸ்) பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய தினேஷ்மாலி, நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் அங்கிருந்து மின்தூக்கிக்காக அமைக்கப்பட்ட இடைவெளியில் தவறி கீழே விழுந்தாா். அதிகாலையில் பாா்த்தபோது தினேஷ்மாலி தலையில் பலத்த காயங்களுடன் தரைத் தளத்தில் கிடந்தாா். இதையடுத்து உடன் இருந்தவா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com